மோட்டார் சைக்கிள் திருட்டு; வாலிபர் கைது
மீஞ்சூரை அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 42). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டுக்கு தேவையான மளிகைசாமான்களை வாங்குவதற்காக மீஞ்சூர் பஜாருக்கு மோட்டார்;
மீஞ்சூர்,
மீஞ்சூரை அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 42). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டுக்கு தேவையான மளிகைசாமான்களை வாங்குவதற்காக மீஞ்சூர் பஜாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து திருநாவுக்கரசு மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடசென்னை அனல்மின் நிலைய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் நிற்காமல் வேகமாக சென்றார். போலீசார் அவரை துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த எடிசன் (23) என்பது தெரியவந்தது. மேலும் அவர் திருநாவுக்கரசின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் எடிசனை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.