அடையாறில் துணிகரம் போலீஸ்காரரின் செல்போன் கத்திமுனையில் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றுபவர், தியாகராஜன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து லஸ் சர்ச் சாலையில் நாகேஸ்வரா பூங்கா அருகில்

Update: 2016-12-24 21:33 GMT
அடையாறு,

சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றுபவர், தியாகராஜன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து லஸ் சர்ச் சாலையில் நாகேஸ்வரா பூங்கா அருகில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தியாகராஜனை வழிமறித்தனர்.

கத்தியை காட்டி மிரட்டி தியாகராஜன் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை அவரிடம் இருந்து பறித்து சென்றனர். இதுதொடர்பாக தியாகராஜன் அளித்த புகாரின்பேரில் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மயிலாப்பூரில் ஆயுதப்படை போலீஸ்காரரையே வழிமறித்து செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. 

மேலும் செய்திகள்