தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி ஊராட்சியில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் முன்னுரிமை பயனாளிகள் மற்றும் முன்னுரிமையில்லா பயனாளிகள் குறித்து கள ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி ஊராட்சியில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் முன்னுரிமை பயனாளிகள் மற்றும் முன்னுரிமையில்லா பயனாளிகள் குறித்து கள ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது:–
அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் ஆகிய தாலூகாவில் உள்ள 440 நியாய விலைக்கடைகளில் உள்ள 2,12,888 குடும்ப அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் முன்னுரிமை பயனாளிகள் மற்றும் முன்னுரிமையில்லா பயனாளிகள் குறித்து களஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கான முதற்கட்ட பணிக்காக வருவாய்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, வீடு வீடாக சென்று களஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இவ்வாய்வின்போது, அரசு அலுவலர்கள் மற்றும் நியாய விலைக்கடை ஊழியர்கள் உடனிருந்தனர்.