இரையுமன்துறை பகுதியில் பறக்கும்படையினர் அதிரடி சோதனை: பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 210 லிட்டர் மண்எண்ணெய்யும் சிக்கியது
இரையுமன்துறை பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தியதில், பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 210 லிட்டர் மண்எண்ணெய்யும் சிக்கியது. ரேஷன் அரிசி பறிமுதல் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க ப;
நித்திரவிளை,
இரையுமன்துறை பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தியதில், பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 210 லிட்டர் மண்எண்ணெய்யும் சிக்கியது.
ரேஷன் அரிசி பறிமுதல்கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பறக்கும் படை தாசில்தார் இக்னேஷியஸ் சேவியர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் இரையுமன்துறை கடற்கரை கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை அந்த பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பாழடைந்த வீட்டில் சாக்குமூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பாழடைந்த வீட்டில் கேரளாவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் காப்புக்காடு குடோனில் ஒப்படைத்தனர்.
மண்எண்ணெய் சிக்கியதுஇதேபோல் மாங்கரையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கேன்களில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் மண்எண்ணெய்யும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கியது. அங்கிருந்த 210 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவுக்கு ரேஷன் மண்எண்ணெயை கடத்துவதற்காக தென்னந்தோப்பில் பதுக்கி வைத்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.