உடுமலையில் பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்கள் பரவும் அபாயம்

உடுமலை ராஜேந்திரா ரோட்டில் உள்ள அரசு பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கழிவுநீர் உடுமலை ராஜேந்திரா ரோட்டில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு உடுமலை நகரப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்க

Update: 2016-12-24 21:45 GMT

மடத்துக்குளம்

உடுமலை ராஜேந்திரா ரோட்டில் உள்ள அரசு பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாக்கடை கழிவுநீர்

உடுமலை ராஜேந்திரா ரோட்டில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு உடுமலை நகரப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி அருகே தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளியின் 3 புறமும் சாக்கடை கால்வாய், ஒரு புறம் நகராட்சி பூங்கா என்ற அமைப்பிலேயே அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

இதில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், சாக்கடை கழிவுநீர் வழிந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் முறையாக அமைக்கப்படாததால், ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் தேங்கும் அவலம் தொடர்கிறது.

எதிர்பார்ப்பு

மேலும், சாக்கடை கழிவுநீர் நிரம்பி ரோட்டில் வழிவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. வாரச்சந்தைக்கு மிக அருகில் உள்ள இந்த பகுதியை பலர் திறந்த வெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் ஈக்களும், கொசுக்களும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பள்ளியினுள் கொசுத்தொல்லை மற்றும் துர்நாற்றத்தால் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தொடரும் சுகாதார சீர்கேட்டால் பல்வேறு விதமான நோய் தொற்றுகளுக்கும் ஆளாகின்றனர்.

எப்போதாவது வரும் சுகாதார பணியாளர்கள் சாக்கடை கால்வாய்க்குள் கிடக்கும் குப்பை கூளங்களை எடுத்து வெளியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். ஆனாலும் கழிவுநீர் வெளியேறுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாருவது மட்டுமல்லாமல் கழிவுநீர் வெளியேற வழி செய்ய வேண்டும் என்பது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள பகுதியில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு காண அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்