தூத்துக்குடியில் தொழிலாளர்கள் அனைவரும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் தொழிலாளர் ஆய்வாளர் வேண்டுகோள்

தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் ஆய்வாளர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;– வங்கி கணக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப

Update: 2016-12-24 19:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் ஆய்வாளர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

வங்கி கணக்கு

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர் ரவிகுமாரின் வழிகாட்டுதலின் பேரில், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சரவணன், நெல்லை தொழிலாளர் துணை ஆணையர் ஹேமலதா ஆகியோரின் அறிவுரைகளின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், சில்லரை வியாபார கடைகள் உள்ளிட்ட அனைத்து இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்டிப்பாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.

சம்பள பணம்

சம்பள பட்டுவாடா சட்டம் 1936–ன் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் காசோலையாகவோ அல்லது வங்கி மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ மட்டும் தான் வழங்க வேண்டும். எனவே அனைத்து வகையான நிறுவனங்களின் உரிமையாளர்களும் தங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள பணத்தை காசோலை அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்