நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவாரூர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பனகல் சாலை நகர கட்சி அலுவலகத்தில் இருந்த

Update: 2016-12-24 23:00 GMT

திருவாரூர்,

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூர்

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பனகல் சாலை நகர கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு புதுத்தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை அடைந்தனர். அங்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமையில், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மலர்மணிகண்டன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு சங்க தலைவர்கள் முத்துமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல்

குடவாசல் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் பாப்பா.சுப்பிரமணியன், எஸ்.ராஜேந்திரன், நகர செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் குடவாசல் அகரஓகை பாலத்தில் புறப்பட்டு, பஸ் நிலையம், கடைத்தெரு, வடக்குவீதி, கீழவீதி, அண்ணா வடக்குவீதி வழியாக திருக்குளம் தென்கரையை வந்தடைந்தது. பின்னர் அ.தி.மு.க.வினர் புகழஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் வெற்றியழகன், அன்பழகன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.ராஜேந்திரன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் குருமூர்த்தி, இமயவரம்பன், நகர துணைச்செயலாளர் சிங்காரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்னிலம்

நன்னிலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில்

இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ராம.குணசேகரன், சி.பி.ஜி.அன்பு ஆகியோர் தலைமை தாங்கினர். அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஒன்றிய துணைச்செயலாளர் உதயகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் புகழேந்தி, நன்னிலம் நகர செயளாளர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் ஒன்றிய, நகர அ.தி.மு.க, சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஒன்றிய செயலாளர் நடராஜன், நகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில், பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஜெயராமன், ஒன்றிய துணைச்செயலாளர் ஜெகன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெய்குமார், மாணவர் அணி செயலாளர் பாரதிதாசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் தாவூது, மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்