சீமை கருவேல மரங்களை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் மாநகராட்சி ஆணையர் தகவல்
தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள அறி
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.