பட்டுக்கோட்டையில் மயங்கி விழுந்த பெண் சாவு யார் அவர்? போலீஸ் விசாரணை

பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் முனிகோவில் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார். இறந

Update: 2016-12-24 22:45 GMT

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் முனிகோவில் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார். இறந்த பெண் நீல நிற நைட்டி அணிந்து இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்