வீராணம் ஏரி தூர்வாரியதில் நடந்த முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் சிதம்பரம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

வீராணம் ஏரியை தூர்வாரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சிதம்பரம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். கருகிப்போன பயிர்களுக்கு இழப்பீடு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்

Update: 2016-12-24 22:45 GMT

சிதம்பரம்,

வீராணம் ஏரியை தூர்வாரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சிதம்பரம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கருகிப்போன பயிர்களுக்கு இழப்பீடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் சிவலிங்கம், குப்புசாமி, முத்துகுமாரசாமி மற்றும் நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். கருகிப்போன நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு 10 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனத்திற்கு கொண்டுவர திட்டம் உருவாக்க வேண்டும். ஏரி, குளம், வாய்க்காலை தூர்வார சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 250 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.

சி.பி.ஐ. விசாரிக்க...

வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கான்சாகிப் வாய்க்கால் பாசனத்திற்கு ரூ.410 கோடியில் கொள்ளிடம் ஊற்றுநீரை கொண்டு வரும் திட்டத்தை உடனே நிரப்ப வேண்டும்.

பக்கிங்காம் கால்வாயில் செக்டேம் அமைத்து கொடுக்க வேண்டும். தம்பிக்குநல்லாண்பட்டினத்தில் இருந்து தீர்த்தாம்பாளையம் வரை வெள்ளாற்று கரையை உயர்த்தி கட்டிக்கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் விஜயலட்சமி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், முறைகேடு புகார் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்