தர்மபுரி, பென்னாகரத்தில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
பெரியாரின் நினைவு நாளையொட்டி தர்மபுரியில் உள்ள அவருடைய சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பெரியார் நினைவுநாள் தந்தை பெரியாரின் நினைவுநாள் நேற்று தர்மபுரியில் அனுசரிக்கப்பட்ட
தர்மபுரி,
பெரியாரின் நினைவு நாளையொட்டி தர்மபுரியில் உள்ள அவருடைய சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பெரியார் நினைவுநாள்தந்தை பெரியாரின் நினைவுநாள் நேற்று தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரியில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் குருநாதன், முன்னாள் நகராட்சி தலைவர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், பார்த்திபன், முன்னாள் நகர செயலாளர் ரவி, சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் செல்வி திருப்பதி, நல்லதம்பி, பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை மற்றும் பெரியாரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க– திராவிடர் கழகம்தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், நாட்டான்மாது, மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், முன்னாள் நகர செயலாளர் சிட்டிமுருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, குட்டி, ஏ.சண்முகம், வி.சண்முகம், தேசிங்குராஜன் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் சிவாஜி தலைமையில் மாநில பகுத்தறிவாளர் கழக செயல்தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் கருபாலன், மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட துணைத்தலைவர் கதிர், நகர தலைவர் பரமசிவம், இளைஞர் அணி அமைப்பாளர் கோவிந்தராஜ், வாசகர் வட்ட செயலாளர் பரிமளம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம்பென்னாகரத்தில் தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி சந்தைதோப்பில் உள்ள பெரியார் சிலைக்கு இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.