நயினார்கோவில் வட்டாரத்தில் கண்மாய், வரத்துக்கால்வாய்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நயினார்கோவில் வட்டாரத்தில் கண்மாய், வரத்துக்கால்வாய்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் பரமக்குடி தாலுகா பாண்டியூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை வறட்சி மாவட

Update: 2016-12-24 22:30 GMT

பரமக்குடி,

நயினார்கோவில் வட்டாரத்தில் கண்மாய், வரத்துக்கால்வாய்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

பரமக்குடி தாலுகா பாண்டியூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், நயினார்கோவில் வட்டாரத்தில் உள்ள கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வார வேண்டும், பாண்டியூரில் ஆரம்ப சுகாதார நிலையம், உயர்நிலைப்பள்ளி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஆகியவை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நடராஜன் தலைமை தாங்கினார். ராமலிங்கம், சாமித்துரை, முனியசாமி, தில்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் மணிபாரதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்மண்டல தலைவர் மதுரைவீரன், ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அங்குச்சாமி, வைகை பாசன விவசாயிகள் சங்க பொருளாளர் பாஸ்கர பாண்டியன், கவுரவ தலைவர் ரத்தினசபாபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜீவா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முடிவில் குருசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்