நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் மாலை அணிவித்தும், ஊர்வலமாக சென்றும் மரியாதை செய்யப்பட்டது. நினைவு தினம் மானாமதுரையில் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் அ

Update: 2016-12-24 23:00 GMT

மானாமதுரை,

முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் மாலை அணிவித்தும், ஊர்வலமாக சென்றும் மரியாதை செய்யப்பட்டது.

நினைவு தினம்

மானாமதுரையில் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் அவரது படத்திற்கு மானாமதுரை நகர செயலாளர் விஜிபோஸ் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜோசப் ஜெயசீலன், மாணவரணி செயலாளர் விஜயகுமார், ஜெ.பேரவை வார்டு செயலாளர் நமச்சிவாயம், நகர அவைத்தலைவர் தனசேகரன், வார்டு செயலாளர் நாகுநரசிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் மாவட்ட வழக்கறிஞர் துணை செயலாளர் குரு முருகானந்தம் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலையணிவித்து மரியாதை செய்தனர்.

மலர்தூவி அஞ்சலி

இளையான்குடி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி இளையான்குடி வாள் மேல் நடந்த அம்மன் கோவில் அருகே அவரது படத்திற்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கிழாய்குடியிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிலவள வங்கி தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொருளாளர் ரத்தினம், பேரூர் செயலாளர் அன்வர், பேரூராட்சி முன்னாள் தலைவர் அயூப், பி.கே.செல்வம், ஈஸ்வரன், பொதுக்குழு நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி திருப்பத்தூர் காந்தி சிலை அருகே கூடிய அ.தி.மு.க.வினர் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரும் பஸ் நிலையம், மதுரை ரோடு வழியாக அண்ணாசிலை வரை மவுன ஊர்வலம் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் இப்ராம்ஷா, ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், துணை செயலாளர் முருகேசன், நகர துணைச் செயலாளர் ரவி, ஜெ.பேரவை ஒன்றியச் செயலாளர் வெற்றிச்செல்வன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சோமசுந்தரம் உள்பட கட்சி நிர்வாககிகள் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. சீரணி அரங்கில் தொடங்கிய இந்த ஊர்வலம் இருந்து சிங்கம்புணரி பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே முடிவடைந்தது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வாசு, நகர செயலாளர் ராஜசேகரன், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயந்தன், சுரேந்திரன், ரவீந்திரன், வையாபுரிபட்டி விஜயராஜ், காளாப்பூர் தமிழரசன், எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்த நல்லையா, எம்.சூரக்குடியை சேர்ந்த சரவணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் பொன்.பாலாஜி, சதீஸ், குணசேரன், மணிவண்ணன் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்