அரிய வகை கடல் உயிரினம்!

அரிய வகை கடல் உயிரினம் ஒன்று கடல் உயிரின ஆய்வாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல்நீர் வாழ் உயிரினங்களில் இது எந்த வகையைச் சேர்ந்தது என அடையாளப்படுத்தப்படாத நிலையில், ‘கிரினாய்டு’ என அழைக்கப்படுகிறது. இந்த அழகான உயிரினம், தற்

Update: 2016-12-24 09:14 GMT
அரிய வகை கடல் உயிரினம் ஒன்று கடல் உயிரின ஆய்வாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல்நீர் வாழ் உயிரினங்களில் இது எந்த வகையைச் சேர்ந்தது என அடையாளப்படுத்தப்படாத நிலையில், ‘கிரினாய்டு’ என அழைக்கப்படுகிறது.
இந்த அழகான உயிரினம், தற்போது தாய்லாந்தின் பாலி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரினாய்டுகள் என்ற உயிரினத்தை பவளப் பாறை பகுதிகளில் காண்பது சாதாரணம்தான் என்றாலும், அவை நீந்துவதைக் காண்பது மிக அரிதான விஷயம் ஆகும்.

இவை பாறைகள் அல்லது பவளங்களுடன் எப்போதும் இணைந்தே காணப்படும்.

பறவையும் மீனும் கலந்த ஒரு வடிவத்தைக் கொண்ட கடல் உயிரினமாக இந்த ‘கிரினாய்டு’ கருதப்படுகிறது.

இந்த உயிரினம் நீந்தும்போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் அதிகமான பேரால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்