முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய கடல் ஆமைகள் கடற்கரைக்கு வரத் தொடங்கின

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக கடல் ஆமைகள் புதுச்சேரி கடற்கரைக்கு வரத்தொடங்கியுள்ளன. கடல் ஆமைகள் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடல் ஆமைகள் கடற்கரைகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இதற்காக நவம்பர் மாதம் முதலே ஆ

Update: 2016-12-23 22:30 GMT

புதுச்சேரி

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக கடல் ஆமைகள் புதுச்சேரி கடற்கரைக்கு வரத்தொடங்கியுள்ளன.

கடல் ஆமைகள்

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடல் ஆமைகள் கடற்கரைகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இதற்காக நவம்பர் மாதம் முதலே ஆமைகள் புதுச்சேரி கடற்கரைக்கு வரத் தொடங்கி விடும்.

கடற்கரையில் மணலில் குழிதோண்டி முட்டையிட்டு அதை மூடிவைத்துவிட்டு அவை மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். ஒரு ஆமை மட்டும் சுமார் 120 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் சுமார் 50 முதல் 55 நாட்களில் பொறித்து குஞ்சுகள் வெளியில் வரும்.

தாமதமாக வருகை

இவ்வாறு முட்டையிடுவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதத்திலேயே கடற்கரை வருவது வழக்கம் என்றாலும் இந்த ஆண்டு கடல் சீதோஷ்ண மாற்றம் மற்றும் புயல் காரணமாக ஆமைகள் தற்போது கடற்கரைக்கு தாமதமாக வரத்தொடங்கியுள்ளன. இந்த ஆமைகள் சில மீனவர்களின் படகில் அடிபட்டு இறந்து அவ்வப்போது கரை ஒதுங்குகின்றன.

இனப்பெருக்கத்திற்காக வரும் ஆமைகளை பாதுகாத்திட வனக்காப்பாளர் குமார் தனிக்குழு அமைத்துள்ளார். இந்த குழுவினர் கன்னியகோவில் முதல் கனகசெட்டிகுளம் வரை கடற்கரை பகுதியில் அடிக்கடி ரோந்து வருகின்றனர்.

ஆமைகள் கடற்கரையில் விட்டுச் செல்லும் முட்டைகளை பாதுகாப்பாக வைத்து குஞ்சு பொறிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகின்றனர். படகுகளில் அடிபட்டு செத்துப்போன ஆமைகளை கடற்கரையில் இருந்து அகற்றி மணலில் குழிதோண்டி புதைத்து வருகின்றனர்.

கடல் ஆமைகள் முட்டையிடுவது குறித்த தகவல்களை பெற வனத்துறையினர் தங்கள் செல்போன் எண்களையும் கடற்கரை பகுதியில் ஆங்காங்கே ஒட்டிவைத்துள்ளனர். மீனவர்கள் வசமும் அந்த எண்களை கொடுத்து தகவல் சொல்ல கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்