சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து ‘உலகில் அன்பும், சமாதானமும் நிலவட்டும்’

புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகில் அன்பும், சமாதானமும் நிலவட்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வைத்திலிங்கம் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து

Update: 2016-12-23 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகில் அன்பும், சமாதானமும் நிலவட்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்திலிங்கம்

புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசு என்பதற்கு பாவங்களில் இருந்து விடுவிப்பவர் என்பது பொருளாகும். மனிதர்களை பாவத்தில் இருந்து விடுதலை பெறச்செய்வதே இயேசு பிறப்பின் நோக்கமாக உள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் புதுச்சேரியில் வாழும் மக்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் பிறருக்கு செய்யும் தீங்குகளை நிறுத்தினாலே பாவங்களில் இருந்து நிச்சயம் விடுதலை கிடைக்கும். எனவே இயேசு பிறந்த நாளில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் பிறருக்கு செய்யும் தீங்குகளை நிறுத்தி பாவங்களில் இருந்து விடுதலை பெற உறுதி ஏற்போம். இயேசு பரப்பிய அன்பும், சமாதானமும் இந்த மண்ணில் நிலவ நம்மால் இயன்றதைச் செய்யவும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நமச்சிவாயம்

அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

அன்பு, கருணை, பொறுமை, மனித நேயம் போன்ற நற்பண்புகளை இந்த உலகிற்கு அருட்கொடையாக வழங்கியவர் அற்புத மகான் இயேசுபிரான். அவரது பிறந்த நன்னாளை புனித திருநாளாக, கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். காட்சிக்கு எளியவர், கடுஞ்சொல் அற்றவர், ஏழை எளிய மக்களுக்கு உற்ற துணைவர், தன்னை வருத்திக்கொண்டு பிறருக்காக வாழ்ந்து எல்லோருக்கும் நன்மை புரிந்த மனித தெய்வம் இயேசுபிரான்.

மன்னிப்பு என்ற மந்திர வார்த்தை மூலம் மனித குலத்தை புனிதம் அடையச் செய்த இயேசுபிரானின் பொன்மொழிகளை அனைவரும் பின்பற்றி வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம். கருணை வடிவான இயேசுபிரான் பிறந்த திருநாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்