கவர்னர் மாளிகையில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி கிரண்பெடி தகவல்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– சொற்பொழிவு நிகழ்ச்சி பல்வேறு துறைகளில் சாதனைகள் பு

Update: 2016-12-23 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சொற்பொழிவு நிகழ்ச்சி

பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த தலைவர்கள் நினைவாக புதுவை கவர்னர் மாளிகையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் வரலாறு, கலை, இலக்கியம், மொழி, இசை, கல்வி, அரசியல், ஆளுமைத்திறன், தலைமைப் பண்பு உள்பட பல்வேறு தலைப்புகளில் சிறந்த பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்கள் அழைக்கப்பட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இதற்காக கவர்னர் மாளிகையில் 100 பேர் அமரக்கூடிய அளவில் அரங்கம் தயாராக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அழைப்பாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும்.

தலைவர்கள்

தொடர் சொற்பொழிவுகளுக்கு வழக்கமான பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுவர். புதுச்சேரி மாநிலத்துக்கு சிறந்த சேவை புரிந்த மறைந்த முன்னாள் கவர்னர் மல்கானி, சேத்திலால், குர்ஜார் ஆகியோர் நினைவாக தொடர் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உள்பட சிறந்த தலைவர்களின் நினைவாக இந்த சொற்பொழிவுகள் நடைபெறும். இதில் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

மல்கானி

முதல் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் பேச்சாளர் ராஜிவ் பேஷ்வாரியா கலந்து கொண்டு மறைந்த முன்னாள் கவர்னர் மல்கானி குறித்து சொற்பொழிவாற்றினார். இதில் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்