தற்கொலைக்காக தீக்குளிப்பு: உடலில் எரிந்த தீயுடன் கழிவுநீர் கால்வாயில் குதித்த தொழிலாளி

புதுவையில் தற்கொலைக்காக தீக்குளித்து தொழிலாளி உடலில் எரிந்த தீயுடன் கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளி புதுவை கோரிமேடு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செபஸ்டியான் (வயது43). தொழிலாளி.

Update: 2016-12-23 22:06 GMT

புதுச்சேரி,

புதுவையில் தற்கொலைக்காக தீக்குளித்து தொழிலாளி உடலில் எரிந்த தீயுடன் கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளி

புதுவை கோரிமேடு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செபஸ்டியான் (வயது43). தொழிலாளி. இவருடைய மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செபஸ்டியானுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்த வந்ததுடன் தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வந்ததால் செபஸ்டியானை அவரது மனைவி ஸ்டெல்லா கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த செபஸ்டியான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது, மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் அலறித்துடித்த அவர் பின்னர் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்தார்.

சிகிச்சை

இதைப் பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீக்காயமடைந்த செபஸ்டியானை கால்வாயில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்