திருவள்ளூர் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

திருவள்ளூரை அடுத்த நெமிலிச்சேரி- பட்டாபிராம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

Update: 2016-12-23 21:42 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த நெமிலிச்சேரி- பட்டாபிராம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், பிரவுண் நிறத்தில் வெள்ளை கோடு போட்ட டி-சர்ட்டும் அணிந்திருந்தார்.

இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

மேலும் செய்திகள்