கறம்பக்குடி பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

கறம்பக்குடி பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கறம்பக்குடி வியாபாரிகள் சங்க பொதுக்குழுகூட்டத்தில் வலியுறுத்தபட்டது. பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூ

Update: 2016-12-23 22:30 GMT

கறம்பக்குடி,

கறம்பக்குடி பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கறம்பக்குடி வியாபாரிகள் சங்க பொதுக்குழுகூட்டத்தில் வலியுறுத்தபட்டது.

பொதுக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வர்த்தக கழக தலைவர் சீனுசின்னப்பா தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் வரவேற்றார். திரைப்பட இயக்குனர் பாரதிகிருஷ்ணகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் காந்தி, அய்யப்பன், ரோஸ்னிஅப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல்லா நன்றி கூறினார். கூட்டத்தில் கறம்பக்குடி பகுதியில் கடந்த 2 மாதமாக பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம்.மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு நிதி ஒதுக்கீடு

நீர் நிலைகள் மற்றும் வரத்துவாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். கறம்பக்குடியில் ஸ்டேட் வங்கி கிளை தொடங்க வேண்டும். கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கறம்பக்குடி பேரூராட்சி சார்பில் வட்ட நூலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நூலக கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மூத்த உறுப்பினர்களுக்கு கவுரவிக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்