குன்னத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை, காலாவதியான பொருட்கள் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் குன்னம் கிராமத்தில் உள்ள கடைகள், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், தனியார் உணவகம், டீக்கடை, மளிகை கடை, பேக்கரி ஆகியவற்றில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனை

Update: 2016-12-23 22:00 GMT

குன்னம்,

பெரம்பலூர் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் குன்னம் கிராமத்தில் உள்ள கடைகள், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், தனியார் உணவகம், டீக்கடை, மளிகை கடை, பேக்கரி ஆகியவற்றில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவைகள் பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. சோதனையின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழகுவேல், சின்னமுத்து, ரத்தினம் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும் கடைகளில் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்