ஜெயங்கொண்டத்தில் சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை

ஜெயங்கொண்டத்தில் உள்ள சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். எண்ணெய் நிறுவனம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் விக்டர் ஏஜென்சீஸ் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்

Update: 2016-12-23 22:15 GMT

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தில் உள்ள சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

எண்ணெய் நிறுவனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் விக்டர் ஏஜென்சீஸ் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து திருச்சி வருமானவரித்துறையின் புலனாய்வு துறை உதவி இயக்குனர் யாசர்அராபத் தலைமையில் சுமார் 8 பேர் கொண்ட குழுவினர், எண்ணெய் நிறுவனத்தில் சோதனையை தொடங்கினர். நேற்றும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

வங்கி கணக்குகள் ஆய்வு

நேற்று அதிகாலை முதல் அந்த எண்ணெய் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளரின் வீட்டில் வருமானவரித்துறையினர் முழுவீச்சில் சோதனை நடத்தினர். மேலும் நிறுவனத்தின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தனர். நேற்று இரவு வரை இந்த சோதனை நீடித்தது. சென்னையிலும், புதுச்சேரியிலும் உள்ள அந்நிறுவன அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டு, அங்கு கிடைத்த ஆவணங்களுடன் ஜெயங்கொண்டத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்