வர்த்தக துறைமுகத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கக்கோரி பா.ஜனதா தர்ணா போராட்டம்

குமரி மாவட்டத்தில் குளச்சல் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, வர்த்தக துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க கோரி கிள்ளியூர் பேரூராட்சி பா.ஜனதா சார்பில் கருங்கல் அருகே தொலையாவட்;

Update: 2016-12-23 22:00 GMT

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் குளச்சல் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, வர்த்தக துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க கோரி கிள்ளியூர் பேரூராட்சி பா.ஜனதா சார்பில் கருங்கல் அருகே தொலையாவட்டத்தில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. பேரூராட்சி பா.ஜனதா தலைவர் தாணுமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோபால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். கிராம மண்டல தலைவர் சுடர்சிங், மாநில விவசாய அணி துணைதலைவர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாநில பேச்சாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்