தெருநாய் கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் மனித உரிமை கமிஷன் உத்தரவு

கோட்டயம் நகரில் மாநில மனித உரிமை கமிஷன் சார்பாக பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் மோகன்குமார் தலைமை தாங்கினார். முகாமில், ஆற்றில் கழிவுகள் கலப்பது, அடிதடி வழக்கில் நஷ்டதொகை, கோழி, பன்றி பண்ணைகளால் ஏற்

Update: 2016-12-23 22:00 GMT

கோட்டயம்

கோட்டயம் நகரில் மாநில மனித உரிமை கமிஷன் சார்பாக பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் மோகன்குமார் தலைமை தாங்கினார். முகாமில், ஆற்றில் கழிவுகள் கலப்பது, அடிதடி வழக்கில் நஷ்டதொகை, கோழி, பன்றி பண்ணைகளால் ஏற்படும் பிரச்சினைகள், தெருநாய் கடித்ததற்கு நஷ்டஈடு என்பன உள்ளிட்டவை தொடர்பாக மொத்தம் 84 மனுக்கள் பெறப்பட்டன. இதில் குறகச்சால் பகுதியை சேர்ந்த பொன்னம்மா என்ற பெண் தன்னை தெருநாய் கடித்ததாகவும், அதற்கு குறகச்சால் பஞ்சாயத்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மனித உரிமை கமிஷன் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குறகச்சால் பஞ்சாயத்து நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்