உத்தமபாளையம் அருகே வாழைக்காய் குளிர்பதன கிடங்கு தீப்பிடித்து நாசம்
உத்தமபாளையம் அருகே வாழைக்காய் குளிர்பதன கிடங்கு தீப்பிடித்து நாசமானது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. குளிர்பதன கிடங்கு தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் அருகே வாழைக்காய் குளிர்பதன கிடங்கு தீப்பிடித்து நாசமானது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.
குளிர்பதன கிடங்குதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7 கோடி மதிப்பில் வாழைகாய் குளிரூட்டு நிலையம் அமைக்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான இந்த கிடங்கில் வாழைகாய் குளிரூட்டம் செய்ய 8 அறைகள் அமைக்கபட்டு உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 2 குளிர்சான எந்திரங்கள் வீதம் 16 எந்திரங்கள் அமைத்து இருந்தனர்.
இங்கு பதப்படுத்தப்பட்டு வைக்கப்படும் வாழைக்காய்கள் வெளி நாடுகளுக்கு வாரந்தோறும் 4 டன் வரை அனுப்பப்படுகிறது. குறிப்பாக சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
தீப்பிடித்து நாசம்நேற்று முன்தினம் நள்ளிரவில் குளிர்சாதன அறையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து அறைகளிலும் தீ பரவியது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நிலைய காவலாளி, இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் கம்பத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 30–க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் குளிர்பதன கிடங்கு முழுவதும் எரிந்து தரைமட்டமானது.
ரூ.5 லட்சம் சேதம்இந்த தீ விபத்தில் குளிர்பதன கிடங்கில் வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த 30 டன் வாழைக்காய் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். தீவிபத்து குறித்து அந்த பகுதியில் தகவல் பரவியதால் பொதுமக்களும் திரண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார்.