மழைபெய்ய வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள் மூலைக்கரைப்பட்டி அருகே நடந்தது

மழைபெய்ய வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர். மழைபெய்ய வேண்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு பருவமழை இன்றி பொதுமக்களும், விவசாயிகளும் தவித்து வருகின்றனர். இன்னும் 10 நாட்களில் மழை பெய்யாவிட்டால் குடிநீருக்காக தாமிரப

Update: 2016-12-23 21:30 GMT

இட்டமொழி,

மழைபெய்ய வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.

மழைபெய்ய வேண்டி

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு பருவமழை இன்றி பொதுமக்களும், விவசாயிகளும் தவித்து வருகின்றனர். இன்னும் 10 நாட்களில் மழை பெய்யாவிட்டால் குடிநீருக்காக தாமிரபரணியை நம்பி உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு மக்கள் தங்கள் தெய்வங்களை நம்பி வழிபாடு நடத்தி வருகின்றனர். சிலர் வினோத முறையில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி மழைவராதா என காத்திருக்கின்றனர்.

முந்தைய காலத்தில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தால் மழை பெய்யும் என்ற கருத்தினை கொண்டு நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சேரகுளத்தை அடுத்த சின்னார்குளம் கிராம மக்களும், விவசாயிகளும் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

கழுதைகளுக்கு திருமணம்

இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது. சின்னார்குளம் வெற்றி விநாயகர் கோவில் முன்பு மேடை அமைக்கப்பட்டது. ரேடியோவில் மங்கள இசை இசைக்கப்பட்டது. தொடர்ந்து பெண் கழுதைக்கு மஞ்சள் நிற பட்டுசேலை உடுத்தியும், ஆண் கழுதைக்கு பட்டு வேட்டி கட்டியும் தனித்தனியாக மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர். சுமார் 300–க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கழுதைகளுக்கு பின்னால் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு குலவை சத்தம் முழங்க பெண் கழுதைக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கிராம மக்கள் வரிசையாக நின்று மொய் எழுதினார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை ஊர்பெரியவர் அரங்கமன்னார் தலைமையில் பெரியஇசக்கி, இருளப்பன், சண்முகவேலாயுதம், நெல்லையப்பன், பழனிவேல், சுப்பிரமணியன், ராமன் உள்பட கிராம மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்