வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சப்பிரமணியன் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அ
விழுப்புரம்,
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சப்பிரமணியன் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் எல்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மற்றம் ஊராட்சித்துறை மூலம் நிறைவேற்றப்பட்டு வரும் மத்திய, மாநில அரசு திட்டப்பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:–
பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், முதல்–அமைச்சரின் பசுமை வீடு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள், சாலை மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இதர பணிகள் அனைத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.
தரமான சாலைகள்அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக அமைக்கப்படும் தார் சாலைகள் தரமாகவும், 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்திருக்கும் வகையிலும் அமைக்க வேண்டும். இதுவரை அமைத்துள்ள தார் சாலைகளை சரியான முறையிலும் பராமரிக்க வேண்டும். சாலையோரம் அமைக்கப்படும் கல்வெட்டுகள், ஏரிக்கரை கல்வெட்டுகள், தெருவிளக்குகள் ஆகியவற்றை அவ்வப்போது மேற்பார்வையிட்டு கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் மணி, ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர்கள் ராஜா, சுந்தரேசன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.