பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சாத்தூர் அருகிலுள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் மணிசங்கர். இவரது மனைவி செல்வபாண்டியம்மாள்(வயது28). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அதேபகுதியை சேர்ந்த வேல்முருகன்(31) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சந்திப்பதை தவிர்த்ததால
சாத்தூர்,
சாத்தூர் அருகிலுள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் மணிசங்கர். இவரது மனைவி செல்வபாண்டியம்மாள்(வயது28). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அதேபகுதியை சேர்ந்த வேல்முருகன்(31) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சந்திப்பதை தவிர்த்ததால் செல்வபாண்டியம்மாளுடன் வேல்முருகன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வேல்முருகனை அப்பயநாயக்கன்பட்டி போலீசார் கைது செய்தனர்.