பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வைகையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி வழக்கு பொதுப்பணித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கோவிந்தசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:– வைகை ஆற்றில் இருந்து கொந்தகை கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து கிருதுமால் நதி மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 11 கண்மாய்களும், விருதுநகர்

Update: 2016-12-23 22:30 GMT

மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கோவிந்தசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

வைகை ஆற்றில் இருந்து கொந்தகை கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து கிருதுமால் நதி மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 11 கண்மாய்களும், விருதுநகர் மாவட்டத்தில் 31 கண்மாய்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 கண்மாய்கள் பாசன வசதி பெறும்.

ஆனால் தற்போது கிருதுமால் நதி மூலம் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. வைகையில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் உபரியாக சென்றால் தான் அந்த நதி மூலம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் வைகையில் இருந்து நேரடியாகவே தண்ணீர் பெறும் உரிமை எங்களுக்கு உள்ளது. எனவே கிருதுமால் நதி மூலம் பாசனவசதி பெறும் கண்மாய்களுக்கு தேவையான தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் விசாரித்து, பொதுப்பணித்துறை செயலாளர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை அடுத்தமாதம் 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்