28–ந் தேதி குறைதீர்க்கும் கூட்டம்: கியாஸ் சிலிண்டர் வினியோகம் குறித்து புகார் இருந்தால் தெரிவிக்கலாம் கலெக்டர் அண்ணாதுரை தகவல்

கியாஸ் சிலிண்டர் வினியோகம் குறித்து புகார் இருந்தால் வருகிற 28–ந் தேதி நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார். குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூற

Update: 2016-12-23 22:30 GMT

தஞ்சாவூர்,

கியாஸ் சிலிண்டர் வினியோகம் குறித்து புகார் இருந்தால் வருகிற 28–ந் தேதி நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28–ந் தேதி(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் நடக்கிறது. ஒரத்தநாடு வட்டத்தில் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் ஏற்படும் காலதாமதம், அரசு மானியம் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த இந்த குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே கியாஸ் சிலிண்டர் வினியோகம் குறித்த தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள், தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகவும், நேரிலும் தெரிவிக்கலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்