பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 1 கிலோ தங்க நகைகள் மீட்பு; 2 பேர் கைது

மதுக்கூர் அருகே பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 1 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டு 2 பேரை கைது செய்தனர். தனிப்படை போலீசார் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் போலீஸ் சரகம் காரப்பங்காடு கிராமத்தில் புகழ்பெற்ற ஆதிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவ

Update: 2016-12-23 22:45 GMT

பட்டுக்கோட்டை,

மதுக்கூர் அருகே பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 1 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டு 2 பேரை கைது செய்தனர்.

தனிப்படை போலீசார்

பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் போலீஸ் சரகம் காரப்பங்காடு கிராமத்தில் புகழ்பெற்ற ஆதிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்காக பந்தல் போட்டு கொண்டிருந்தனர். கடந்த 6.06.2016–ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் பந்தல் வழியாக சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். அங்கு கோவில் திருவிழாவிற்காக தங்க நகைகள் வைத்திருந்த அறையின் பூட்டை உடைத்து லட்ச கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு சென்று விட்டனர். இதுபற்றி கோவில் நிர்வாகம் சார்பில் மதுக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இந்தநிலையில் இந்த கொள்ளை தொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா ஒதியடிக்காடு கிராமத்தை சேர்ந்த அழகேசன் (வயது32), புதுக்கோட்டை மாவட்டம் பந்துவக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாலாஜி (48) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்க நகைகளை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 2 பேரும் பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்