ஓசூர் நீலமேக நகரில் மாரியம்மன் கோவில் முன்பு ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

ஓசூர் நீலமேக நகரில் மாரியம்மன் கோவில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீலமேக நகரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை

Update: 2016-12-23 23:00 GMT

ஓசூர்,

ஓசூர் நீலமேக நகரில் மாரியம்மன் கோவில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு கட்டிடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீலமேக நகரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த கோவில் உள்ள இடத்தில் கோவிலுக்கு தேவையான பொருட்கள் வைக்கும் கட்டிடம் உள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காலை வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு இருந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினார்கள். இதை முன்னிட்டு ஓசூர் டவுன் போலீசார் 20–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார்

பேச்சு வார்த்தை

இந்த நிலையில் கோவில் முன்பு இருந்த கட்டிடம் இடிக்கப்படும் தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினார்கள். அவர்கள் அந்த கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்