சேதமான பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
பல ஆண்டுகளுககு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் ஓடுகள் சேதம் ஏற்பட்டும், சுவர்கள் உடைந்தும் காணப்படுகின்றது. கட்டிடம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இந்த அலுவலகத்திற்கு விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும்
தண்டராம்பட்டு தாலுகா வாணாபுரத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம், சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது விழுப்புரம் மாவட்டம் பகுதியில் செல்லும் வலதுபுற கால்வாய், திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் செல்லும் இடதுபுற கால்வாய் பணிகளை செய்யும் ஊழியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலுவலகமாகவும், ஆலோசனை செய்யும் இடமாகவும் இருந்து வருகின்றது. இந்த அலுவலகத்திற்கு சாத்தனூர் அணையின் மூலம் பாசனம் பெறும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளுககு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் ஓடுகள் சேதம் ஏற்பட்டும், சுவர்கள் உடைந்தும் காணப்படுகின்றது. கட்டிடம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இந்த அலுவலகத்திற்கு விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் இடமாகவும் இருப்பதால் சேதமான கட்டிடங்கள் மற்றும் ஓடுகளை சீரமைகக வேண்டும் என்று விவசாயிகள் கோரிககை விடுத்துள்ளனர்.