பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கீழே தள்ளியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது

ஏத்தாப்பூர் 5–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ராஜாமணி(வயது47). ஏத்தாப்பூர் 4–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(57). இவரது மனைவி சாந்தி(55). இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்தது. இதுதொடர்பான வழக்கில் ராஜாமணிக்கு சாதகமாக தீர்ப்ப

Update: 2016-12-23 22:30 GMT

பெத்தநாயக்கன்பாளையம்,

ஏத்தாப்பூர் 5–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ராஜாமணி(வயது47). ஏத்தாப்பூர் 4–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(57). இவரது மனைவி சாந்தி(55). இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்தது. இதுதொடர்பான வழக்கில் ராஜாமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதையொட்டி அந்த நிலத்துக்கு ராஜாமணி வேலி அமைத்தார். இந்த வேலியை துரைசாமி, சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அகற்றினர். இதுகுறித்து வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ராஜாமணி புகார் செய்தார். அவர் இதுகுறித்து விசாரணை நடத்த ஏத்தாப்பூர் சப்–இன்ஸ்பெக்டர் லதாவுக்கு உத்தரவிட்டார். அதையொட்டி சப்–இன்ஸ்பெக்டர் லதா, சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினரை ஏத்தாப்பூர் போலீஸ்நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்.

அப்போது சாந்தி போலீஸ்நிலையத்தை விட்டு வெளியே ஓடினார். உடனே சப்–இன்ஸ்பெக்டர் லதா அவரை பிடிக்க முயன்றார். இந்தசமயத்தில் சாந்தி, அவரது கணவர் துரைசாமி, மகன்கள் சுரேஷ்(34), ரமேஷ்(32), ராஜேந்திரன்(24) ஆகியோர் சேர்ந்து பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லதாவை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைசாமி, அவரது மனைவி சாந்தி, மகன்கள் சுரேஷ், ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்