மலேசியாவில் வேலை பார்க்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொள்வதாக செல்போனில் கதறல் மீட்கக்கோரி மனைவி கலெக்டரிடம் மனு

மலேசியாவில் வேலை பார்த்து வரும் தொழிலாளி, தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி கதறினார். இதனால் அவரை மீட்கக்கோரி மனைவி நாமக்கல் மாவட்ட கலெக்டரை சந்தித்து, மனு கொடுத்தார். மலேசியாவில் வேலை நாமக்கல் மாவட்டம் வேட்டாம்

Update: 2016-12-23 22:45 GMT

நாமக்கல்,

மலேசியாவில் வேலை பார்த்து வரும் தொழிலாளி, தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி கதறினார். இதனால் அவரை மீட்கக்கோரி மனைவி நாமக்கல் மாவட்ட கலெக்டரை சந்தித்து, மனு கொடுத்தார்.

மலேசியாவில் வேலை

நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியில் உள்ள குடித்தெருவில் வசித்து வரும் சுசீலா என்பவர் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

வேட்டாம்பாடி குடித்தெருவில் வசித்து வரும் நான், எனது கணவர் வெங்கட்ராமனை கடந்த 30.10.2007–ந் தேதி மலேசியாவுக்கு வேலை பார்த்து சம்பாதித்து அனுப்ப அனுப்பி வைத்தேன். அங்கு வேலைபார்த்து வந்த எனது கணவர் 2 ஆண்டுகளிலேயே தமக்கு உடல்நிலை சரியில்லை எனவும், எனது சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறேன் என்றும், அவரை மலேசியாவுக்கு அழைத்து சென்ற நபரிடம் தெரிவித்தார். ஆனால் அந்த நபர் அதை ஏற்க மறுத்து, அவரை அனுப்பாமல் அங்கேயே வைத்து உள்ளார்.

அதையொட்டி நான் செல்போனில் எனது கணவரை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தம்மை அந்த நாட்டில் அடிமைப்போல நடத்துவதாகவும், அங்கு வேலை செய்ய பிடிக்கவில்லை எனவும், சம்பளமும் குறைந்த அளவே கொடுத்து வந்தனர் என்றும் தெரிவித்தார்.

மீட்டு வர கோரிக்கை

இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி மீண்டும் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் என்னை அவர்கள் ஊருக்கு திரும்ப அனுப்பி வைக்க மறுக்கிறார்கள். எனவே, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கதறி அழுதார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அதையடுத்து மலேசியா நாட்டிற்கு வேலை பார்க்க சென்ற எனது கணவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என தெரியவில்லை. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே, எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனது கணவர் வெங்கட்ராமனை சொந்த ஊருக்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.

மேலும் செய்திகள்