நாகர்கோவிலில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம் காரணம் என்ன? போலீசார் விசாரணை

நாகர்கோவில்,
நாகர்கோவிலில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 மோட்டார் சைக்கிள்கள்
நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. காலனி முதல் தெருவை சேர்ந்தவர் மாரி சந்தீஸ் (வயது 22). டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய அண்ணன் நீலகண்டன். இவர் ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். சுமைதூக்கும் தொழிலாளி.
மாரி சந்தீசும், நீலகண்டனும் அப்பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டுக்கு அருகில் ராமலிங்கம் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர்கள் 3 பேரின் மோட்டார் சைக்கிள்களையும் வீட்டின் கீழ் பகுதியில் வழக்கமாக நிறுத்துவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் 3 பேரும் தங்களது மோட்டார் சைக்கிள்களை அருகருகே நிறுத்தியிருந்தனர்.
தீப்பிடித்தது
இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில், ஒரு மோட்டார் சைக்கிள்களில் இருந்து தீ, மள, மளவென பற்றி எரிந்தது. பின்னர் அந்த தீ அருகில் நின்ற மற்ற 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் பரவி எரியத் தொடங்கியது. இதனால் சத்தம் கேட்டு மாரி சந்தீஸ் வெளியே வந்து பார்த்தபோது 3 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
உடனே அவர் தனது அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராமலிங்கம் ஆகியோரை எழுப்பிச் சென்று மோட்டார் சைக்கிள்களில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
விசாரணை
இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் சுபாஷ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாரி சந்தீஷ் மற்றும் அவருடைய அண்ணன் நீலகண்டன், பக்கத்து வீட்டை சேர்ந்த ராமலிங்கம் ஆகியோர் தங்களுக்கு விரோதிகள் யாரும் கிடையாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே மோட்டார் சைக்கிள்களில் தீ பிடித்தது, விபத்தின் காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம் என போலீசாரால் கருதப்படுறது.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
3 மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.