பி.எஸ்.என்.எல். எஸ்.சி, எஸ்.டி பிரிவு ஊழியர்கள் சங்க மாநாடு
பி.எஸ்.என்.எல். எஸ்.சி, எஸ்.டி பிரிவு ஊழியர்கள் சங்க மாநாடு;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு ஊழியர்கள் நலச்சங்க மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்காந்தி வரவேற்று பேசினார். மாநில தலைவர் கனகராஜ், செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சாஜூ ஜார்ஜ், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய தலைவராக தனசேகரன், செயலாளராக சுரேஷ்காந்தி, பொருளாளராக பழனிமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் பி.எஸ்.என்.எல்.துணை பொது மேலாளர்கள் லட்சுமணபெருமாள், எழில் அரசு, பி.எஸ்.என்.எல். எஸ்.சி, எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்க அகில இந்திய பொருளாளர் டைட்டஸ்ஸாம், மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.