நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது

திருவாரூர்,
திருவாரூரில் நுகர் பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க மாநில துணைத் தலைவர் சவுந்தரராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் எடையாளர்களை நியமிக்க வேண்டு்ம். இணைப்பதிவாளரின் பறக்கும் படை ஆய்வினை கைவிட வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்கள் இறக்குவதற்கு ஊழியர் களிடம் இறக்கு கூலி வாங்குவதை நிறுத்த வேண்டும். பொருட்களை பொட்டலமாக வழங்கிட வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல், கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில இணை செயலாளர் சித்ரா, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட செயல் தலைவர் சோமசுந்தரம், கவுர தலைவர் அறிவானந்தம், சங்க மாவட்ட இணை செயலாளர் மனோகரன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.