டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்;
நாகப்பட்டினம்,
டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி நாகையை அடுத்த பாலையூரில் விவசாயிகள், வாய் மற்றும் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
டெல்டா மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை மற்றும் வடகிழக்கு பருவமழையை நம்பி சம்பா சாகுபடி செய்து இருந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவு தண்ணீர் கிடைக்க வில்லை. பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் சாகுபடி செய்ய போதிய அளவு தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயல்களில் ஆடு, மாடுகளை மேயவிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நாகையை அடுத்த பாலையூர் கிராமத்தில் விவசாயிகள் வாய் மற்றும் கண்களில் கருப்பு துணியை கட்டியும், வயல்களில் கருப்பு கொடிகளை கட்டியும், ஆடு, மாடுகளை மேயவிட்டும் வயலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பாலையூர் கிராமத்தை சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.