நாடார்கள் குறித்த சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுடன், நாடார் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை,
நாடார்கள் குறித்த சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க நடவடிக்கை எடுத்த பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நாடார் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.
நாடார் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
மத்திய சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார்கள் குறித்து சில சர்ச்சை குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க வேண்டும் என்று நாடார் அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட பாடத்தை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு நாடார் அமைப்புகள், அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, கோசல்ராம், நெல்லை நாடார் சங்க மீட்பு குழு நிர்வாகிகள் வி.எஸ்.முத்துபாண்டியன், பி.கணேசன், எஸ்.பாலகிருஷ்ணன், முத்துக்குமார், நாடார் சங்க நிர்வாகிகள் டி.ரவிச்சந்திரன், தேவதாஸ், முருகானந்தம், வில்லிவாக்கம் ஜேம்ஸ், மயிலை சந்திரசேகர், சி.எஸ்.வி.பெருமாள், வெள்ளத்துரை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், செய்தி தொடர்பாளர் வே.செல்வராஜ், ஆலந்தூர் வியாபாரிகள் சங்க தலைவர் கதிரேசன், டி.தங்கராஜ் உள்பட பலர் பா.ஜ.க. அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் பா.ஜ.க. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர்.
பாராட்டு கூட்டம்
அப்போது அவர்கள், சி.பி.எஸ்.இ. பாடத்தில் இருந்து நாடார் குறித்த சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘நாடார் குறித்த சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க வேண்டி டெல்லியில் பிரகாஷ் ஜவடேகரை இங்குள்ள நாடார் அமைப்புகளுடன் நேரில் சென்று வலியுறுத்தினேன். நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்’ என்றார்.