டாக்டர் ராமதாசுடன் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் சந்திப்பு

டாக்டர் ராமதாசுடன் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் சந்திப்பு

Update: 2016-12-22 20:46 GMT
சென்னை,

பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கியக் குழுவினர் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினர். அந்தக் குழுவில், இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ அனீபா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹமீது, மறுமலர்ச்சி முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் உமர் பாரூக், ஐக்கிய தேசிய லீக் கட்சியின் தலைவர் நிஜாமுதீன், ஐ.எப்.டி. அமைப்பின் தலைவர் சிக்கந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பல்வேறு பிரச்சினைகளில் இஸ்லாமியர்களின் நலனுக்காக குரல் கொடுத்தமைக்காக டாக்டர் ராமதாசுக்கு இஸ்லாமிய தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணைத் தலைவர் கசாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்