திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் 29–ந்தேதி தொடங்குகிறது

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் வருகிற 29–ந்தேதி தொடங்குகிறது. திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்

Update: 2016-12-22 17:47 GMT

நெல்லிக்குப்பம்,

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் வருகிற 29–ந்தேதி தொடங்குகிறது.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில்

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, தேசிகர் ஆகிய 2 பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். மேலும் வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக நடைபெறும். இதைமுன்னிட்டு, பகல் பத்து உற்சவம், ராப்பத்து உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தின் போது ஆழ்வார்களால் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் தினமும் படிக்கப்படும்.

சொர்க்கவாசல் திறப்பு

இதையொட்டி வருகிற 29–ந்தேதி(வியாழக்கிழமை) பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 1–ந்தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜையும், பகல் பத்து 4–ம் நாள் உற்சவமும், 7–ந்தேதி பகல் பத்து உற்சவ சாற்றுமுறையும் நடைபெறும். 8–ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அன்றே ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. பின்னர் 11–ந்தேதி ஆண்டாள் நீராட்டல் உற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடைபெறும். 3–ம் நாள் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 14–ந்தேதி பொங்கல் சிறப்பு பூஜையும், மூலவர் தேவநாதசுவாமிக்கு தைலக்காப்பு உற்சவமும் நடைபெறும்.

சாற்று முறை

மறுநாள் 15–ந்தேதி கனு தீர்த்தவாரியும், மாட்டு பொங்கலை முன்னிட்டு பரிவேட்டையும், திருவேடர் பரிஉற்சவமும் நடைபெறும். ஜனவரி 17–ந்தேதி ராப்பத்து சாற்று முறையும் நடைபெற உள்ளது.

18–ந்தேதி இயற்பா உற்சவ சாற்று முறையும், ஸ்ரீ தேசிய பிரபந்த உற்சவ சாற்று முறையும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். பூஜைக்கான ஏற்பாடுகளை ஜெயப்பிரகாஷ், பட்டாச்சாரியார் தலைமையில் பட்டாச்சாரியார்களும் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்