தண்டவாள பராமரிப்பு பணி: பாசஞ்சர் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் பயணிகள் அவதி

தண்டவாள பராமரிப்பு பணிக்காக பாசஞ்சர் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் தென்மாவட்ட பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தண்டவாள பராமரிப்பு மதுரை–விருதுநகர் இடையே உள்ள ரெயில்பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக

Update: 2016-12-22 22:30 GMT

மதுரை,

தண்டவாள பராமரிப்பு பணிக்காக பாசஞ்சர் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் தென்மாவட்ட பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தண்டவாள பராமரிப்பு

மதுரை–விருதுநகர் இடையே உள்ள ரெயில்பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி மாதம் 20–ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர அந்த பாதையில் செல்லும் நாகர்கோவில்–கோவை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56319), கோவை–நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில்கள் விருதுநகர், மானாமதுரை வழியாக மதுரை வந்து செல்லுமாறு இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரெயில்கள் மதுரை ரெயில்நிலையத்துக்கு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வரும்.

அதேபோல, செங்கோட்டை–மதுரை பாசஞ்சர் ரெயில் விருதுநகர், கள்ளிக்குடி ரெயில்நிலையங்களுக்கு இடையே தாமதமாக இயக்கப்படும். இந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு சுமார் ¾ மணி நேரம் தாமதமாக வந்து சேரும்.

திருச்செந்தூர்–பழனி பாசஞ்சர் ரெயில் விருதுநகரில் இருந்து சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு பழனி ரெயில் நிலையத்துக்கு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றடையும்.

பயணிகள் அவதி

இந்தநிலையில், நாளை(சனிக்கிழமை) முதல் அரையாண்டுத்தேர்வு விடுமுறை தொடங்குகிறது. இதனால் விடுமுறைக்காலத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று வரும் தென் மாவட்ட பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தண்டவாள பராமரிப்பு பணிக்காக மாற்றுப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்