விழுப்புரத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டம் விழுப்புரம் பி.எஸ்.என்.எல். கோட்ட அலுவலகம் முன்பு நேற்று காலை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கம், ஊழியர்கள் சங்கம், தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம் ஆகியவை சார்பில் ஆர்

Update: 2016-12-22 22:30 GMT

விழுப்புரம்,

விழுப்புரத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் பி.எஸ்.என்.எல். கோட்ட அலுவலகம் முன்பு நேற்று காலை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கம், ஊழியர்கள் சங்கம், தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பிரச்சினையால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் உரிய சம்பளத்தை வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பெற சிரமமான சூழ்நிலை உள்ளதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளன கிளை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஊழியர் சங்க கிளை செயலாளர் முத்துவேல் முன்னிலை வகித்தார். அதிகாரிகள் சங்க கிளை செயலாளர் திருவேங்கடம் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் மாணிக்கமூர்த்தி, தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் செல்வம், உதவி செயலாளர் ரவி, ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேவர், உதவி செயலாளர் சுந்தர், பொருளாளர் கார்த்திகேயன், தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளன கிளை தலைவர் மாசிலாமணி, சேவா சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்