தேனி அருகே அய்யப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினர்
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூர் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து ஒரு வேனில் பக்தர்கள் நேற்று திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் பக்தர்களின் வேன் தேனி–கம்பம்
தேனி,
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூர் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து ஒரு வேனில் பக்தர்கள் நேற்று திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் பக்தர்களின் வேன் தேனி–கம்பம் சாலையில் வீரபாண்டி அருகே உப்பார்பட்டி பிரிவு பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பில் மோதி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ராமநாதன் என்பவர் உள்பட 11 பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.