ரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி கூட்டுறவு சங்க செயலாளர்– பெண் ஊழியர் கைது

ரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க செயலாளரும் பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கம் விருதுநகர் அருகிலுள்ள ஆமத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு கடந்த 3.4.2010 முதல் 31.3.15 வரையிலான காலக்கட்டத்தில்

Update: 2016-12-22 23:00 GMT

விருதுநகர்,

ரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க செயலாளரும் பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கம்

விருதுநகர் அருகிலுள்ள ஆமத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு கடந்த 3.4.2010 முதல் 31.3.15 வரையிலான காலக்கட்டத்தில் விவசாயிகள் நகைக்கடனுக்காக செலுத்திய பணத்தை வரவு வைக்காமலும் பொதுமக்கள் செலுத்திய தொகையினை கணக்கில் திருத்தியும் காசோலை பணத்தினை வங்கி கணக்கில் காட்டாமலும் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கூட்டுறவு அதிகாரி மாரியப்பன் நடத்திய விசாரணையில் 1 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 437ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

செயலாளர் கைது

இதனைதொடர்ந்து அருப்புக்கோட்டை கூட்டுறவு துணை பதிவாளர் ரவீந்திரன் வணிக குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதன்பேரில் அந்த சங்கத்தின் செயலாளரான ஆமத்தூரை சேர்ந்த நல்லராஜ்(வயது52), மாவட்ட கூட்டுறவு வங்கி உதவியாளரான பரங்கிரிநாதபுரத்தை சேர்ந்த சுந்தரேஸ்வரி(37), சூலக்கரை வள்ளுவர் நகரை சேர்ந்த ரேஷன்கடை ஊழியர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் வழக்குப்பதிவு செய்தார்.

இவர்களில் நல்லராஜும் சுந்தரேஸ்வரியும் கைது செய்யப்பட்டனர். சுந்தரமகாலிங்கத்தை தேடிவருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு துறை துணை சூப்பிரண்டு கலிமுல்லாஷா தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்