அடுத்த மாதம் 20–ந் தேதிக்குள் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள பகுதிகளில் குடிநீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பொது மக்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி தினமும் குடிநீர் வினியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை நிலுவையின்றி செலுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் அடுத்த மாதம்(ஜனவரி) 20–ந் தேதிக்குள் 100 சதவீதம் வரி வசூல் செய்து முடிக்க வேண்டும் என்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குருநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மின் வாரிய அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.