திருப்பூரில், நடைபயிற்சிக்கு சென்ற வக்கீலை தாக்கி செல்போனை பறித்த 2 வாலிபர்கள் கைது பெட்ரோல் நிலைய ஊழியரை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளையடித்ததும் அம்பலம்
திருப்பூரில் நடைபயிற்சிக்கு சென்ற வக்கீலை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏற்கனவே பெட்ரோல் நிலைய ஊழியரை கத்தியால் குத்தி பணம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இது குறித்து ப
திருப்பூர்,
திருப்பூரில் நடைபயிற்சிக்கு சென்ற வக்கீலை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏற்கனவே பெட்ரோல் நிலைய ஊழியரை கத்தியால் குத்தி பணம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வக்கீலை தாக்கி செல்போன் பறிப்புதிருப்பூர் வாலிபாளையம் சடையப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகவடிவேல்(வயது 32). இவர் திருப்பூரில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 6 மணி அளவில் நடைபயிற்சிக்காக யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் ரோட்டோரம் நின்றுகொண்டு சண்முகவடிவேல் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் அந்த வழியாக பின்னால் நடந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென்று சண்முகவடிவேலை கீழே பிடித்து தள்ளி சரமாரியாக தாக்கினார்கள். அதில் ஒரு வாலிபர் சண்முகவடிவேலுவிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டான்.
பின்னர் மர்ம ஆசாமிகள் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சண்முகவடிவேல் ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர்கள் 2 பேரையும் துரத்திக்கொண்டு ஓடினார்கள். நொய்யல் ஆற்றுக்குள் இறங்கி ஓடும்போது அந்த வாலிபர்கள் கீழே விழுந்தனர். உடனடியாக அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கத்தியால் குத்தி பணம் கொள்ளைஅதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையிலான போலீசார் அந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு திருவள்ளுவர் தோட்டத்தை சேர்ந்த பிரகாஷ்(23), அனிபா(23) என்பதும், இவர்கள் கூலித்தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டர் எதிரே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியரான திருப்பூர் தேவனம்பாளையத்தை சேர்ந்த சரவணக்குமார்(19) என்பவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஈஸ்வரன் கோவில் பாலம் அருகே நடந்து சென்றபோது பிரகாஷ், அனிபா ஆகியோர் சேர்ந்து சரவணக்குமாரை பிடித்து பாலத்துக்கு கீழே இழுத்துச்சென்று கத்தியால் அவருடைய கன்னத்தில் குத்தியதுடன் அவரிடம் இருந்து ரூ.250, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியது தெரியவந்தது. காயம்பட்ட சரவணக்குமார் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
2 பேர் கைதுஇதைத்தொடர்ந்து பிரகாஷ், அனிபா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.