சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை கடந்த ஜூலை மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கி

Update: 2016-12-22 23:15 GMT

சேலம்,

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை கடந்த ஜூலை மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரிப்பதற்காக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்தா நியமிக்கப்பட்டார்.

அவரின் விசாரணையில் காணாமல் போன சிறுமியை அம்மாபேட்டை ஸ்டேட்பேங்க் காலனியை சேர்ந்த பயாஸ் அகமத் சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும், தகாத முறையில் நடந்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

பயாஸ் அகமத் சிறுமியை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியும், விபசாரத்திற்கு வற்புறுத்தியும், உடன்படாவிட்டால் துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் சாய்தா, துணை போலீஸ் கமிஷனர் ஜார்ஜி ஜோர்ஜ் ஆகியோர் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள பயாஸ் அகமத்திடம் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்