சிதம்பரத்தில் செல்போன் டவரில் 24 பேட்டரிகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சிதம்பரத்தில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்த 24 பேட்டரிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 24 பேட்டரிகள் திருட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் கே.ஆர்.எம்.நகரில் தனியார் செல்போன் டவர் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாளாக இந்த

Update: 2016-12-22 22:30 GMT

சிதம்பரம்,

சிதம்பரத்தில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்த 24 பேட்டரிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

24 பேட்டரிகள் திருட்டு

சிதம்பரம் அண்ணாமலைநகர் கே.ஆர்.எம்.நகரில் தனியார் செல்போன் டவர் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாளாக இந்த டவரில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. இது குறித்து வாடிக்கையாளர்கள், அந்த தனியார் செல்போன் டவர் நிறுவனத்தில் புகார் செய்தனர். அதன்படி அந்த நிறுவனத்தின் அதிகாரியான வேலூர் மாவட்டம் புதுவசூரை சேர்ந்த ஏகாம்பரம் மகன் கார்த்திக்(வயது 31) என்பவர், அந்த செல்போன் டவருக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அந்த டவரில் வைத்திருந்த 24 பேட்டரிகள் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பதும், இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் கிடைக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

வலைவீச்சு

இது குறித்து கார்த்திக், அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் டவரில் இருந்த பேட்டரிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்